இசையமைப்பாளர் அனிருத் - ன் 25 வது படம் ....ரசிகர்கள் வாழ்த்துகள்

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (15:50 IST)
இசையமைப்பாளர் அனிருத் 25 வது படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் அனிருத். இவர் தற்போது, கமல் இந்தியன் -2) , விஜய்சேதுபதி( காத்து வாக்குல ரெண்டு காதல்) , விஜய்( பீஸ்ட் ) உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான   ஜெர்ஸி படத்தின் இந்தி ரீமேக் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அனிருத் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில், அனிருத் தற்போது, டான் , காத்துவாக்குல ரெண்டு காதல்  உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இசையமைப்பாளர் அனிருத் 10 வருடங்களில் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.  அவரது  25 வது படம் காத்துவாக்குல ரெண்டு காதல் படமாகும். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி- நயன்தாரா- சமந்தா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்