2.0 டீசர் வெளியாகும் திரையரங்குகள்!

புதன், 12 செப்டம்பர் 2018 (13:42 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0. இதில் பிரபல பாலிவுட் ஹீரோ அக்ஷயகுமார் வில்லனாக நடித்துள்ளார். இதனால் தென்னிந்தியாவை தாண்டி இந்தியா முழுவதும் 2.0 படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
இந்த படத்தின் டீசர் நாளை விநாயகர் சதுர்த்தி முதல் திரையரங்குகளில் காணமுடியும் என ஷங்கர் அறிவித்து உள்ளார்.
 
570 கோடி ரூபாய்  செலவில் தயாராகி உள்ள இப்படத்துக்கு ஹாலிவுட் தரத்தில் கிராபிக்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே 2.0 டீசரை 3டி தொழில் நுட்பத்தில் ஷங்கர் வெளியிடுகிறார்.  இந்த டீசரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை,திண்டுக்கல், நெல்லை ,சேலம், ஈரோடு, என அனைத்து  முக்கிய நகங்களில் பார்க்க முடியும் . டீசர் வெளியாகும் சில நகரங்களில் உள்ள திரையரங்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்