விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் சீனாவில் வெளியாகவுள்ளது என்று ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சீனாவில் 10,000 திரையரங்குகளில் மெர்சல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மெர்சல் படம் சீனாவில் அதிக வசூலை ஈட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி 2' திரைப்படமே சீனாவில் 7000 திரையரங்குகளில்தான் வெளியானது என்றும், 'மெர்சல்' திரைப்படம் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது உறுதி செய்யப்படாத தகவல் என்றும் கூறப்படுகிறது.