இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சிம்புவின் நண்பர் மஹத் எனபது எல்லோருக்கும் தெரிந்த விஷயம், மஹத் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் அவரை தன் வீட்டில் வைத்து செல்லமாக அடித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சென்ராயனை, சிம்பு தன் வீட்டிற்கு அழைத்து வாழ்த்து கூறியுள்ளார். அதோடு ஒரு பரிசு பொருளை அவருக்கு கொடுத்துள்ளார். அது என்னவெண்ரால் திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மஹத் தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.