2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்து இசையமைத்து வெளியான படம் பிச்சைக்காரன் . இப்படத்தை இயக்குனர் சசி இயக்கினார். இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து, பிச்சைக்காரன் -2 படத்தை விஜய் ஆண்டனி, இயக்கி, நடித்து இசையமைத்ததுடன் தயாரித்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் நேற்றே அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இப்படம் பற்றி நடிகர் கயல் தேவராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில், பக்கா கமர்ஷியல் பேக்கேஜில், படுஜனரஞ்சகமான படத்தைக் கொடுத்துள்ள @vijayantony , இன்றைக்கு எழுதிய தேர்வில், அதாவது, இயக்குனருக்கான எக்ஸாமில் 100/100 மார்க் வாங்கியிருக்கிறார் என்று சொல்லலாம். வாழ்த்துகள் இயக்குனர் கம் நடிகர் சார் என்று பதிவிட்டுள்ளார்.