இந்த நிலையில், ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் பரிசளித்து வரும் நிலையில், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடம்பெறும் மாணவர்களை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும், 234 தொகுதிகளிலும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பென் பெறும் மாணவர்களை சென்னைக்கு அழைத்து விஜய் பரிசு வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில், ''விஜய் மக்கள் இயக்க'' நிர்வாகிகளை சமீபத்தில் விஜய் சந்தித்த நிலையில், மாணவர்களுக்குப் பரிசு வழங்குதல் என்பது அரசியலில் ஈடுபடுவதற்கான அறிகுறி என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.