100 கோடி வசூலித்த மராத்தி படம் தமிழில்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2016 (11:42 IST)
ஃபன்றி திரைப்படத்தை எடுத்து தீவிர சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நாகராஜ் மஞ்சுளேயின் புதிய படம், சைராட்.


 


மராத்தி மொழியில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. நாகராஜ் மஞ்சுளே படத்தை தயாரித்திருந்தார்.
 
சைராட் திரைப்படத்தை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கும் உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் கைப்பற்றியுள்ளார். இவர் சைராட் தயாரிப்பாளர்களுடன் இணைந்து தென்னிந்திய மொழிகளில் சைராட்டை தயாரிக்க உள்ளார்.
 
சைராட் ரீமேக்கை யார் இயக்குகிறார்கள், யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்