ஃபில்லிங்குக்கு தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். டால்டாவை உருக்கி, மாவில் சேர்க்க வேண்டியவற்றை சேர்த்துக் குழைத்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
நெய்யை சூடாக்கி முந்திரி, பாதாம் போட்டு வறுத்து, வெள்ளை எள், கருப்பு எள், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். கடைசியாக சர்க்கரை சேர்த்து வதக்கி இறக்கவும். கலவை சிறிது கெட்டியாக இருக்கும். ஆற வைக்கவும்.
மாவை பூரி மாவு உருண்டை அளவுக்கு உருட்டி, லேசாக மாவு தடவி திரட்டி, சோமாஸ் அச்சில் வைத்து ஃபில்லிங்கை வைத்து மூடவும். எல்லாவற்றையும் இதே போல் செய்து வைக்கவும். தட்டில் ஒட்டாமல் இருக்க மாவு தூவி அடுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, தணலை மிதமாக வைத்து, சோமாஸை பொரித்து எடுக்கவும். நன்கு திருப்பிப் போட்டு, கருகாமல் எண்ணெய்யை வடிய விட்டு எடுத்து வைக்கவும். சுவையான இனிப்பு சோமாஸ் தயார்.
குறிப்பு: எள்ளை கல்லெடுத்து, வடித்து வறுக்க வேண்டும். வறுக்கும் போது பட படவென பொரிய வேண்டும்.