சுவை மிகுந்த பாதுஷா செய்ய !!

வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (16:42 IST)
தேவையான பொருட்கள்:
 
நெய் - 2 மேஜைக்கரண்டி
தயிர் - 3 மேஜைக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/4 மேஜைக்கரண்டி
உப்பு - 1/4 மேஜைக்கரண்டி
மைதா - 1 கப்
சர்க்கரை - 11/4 கப்
தண்ணீர் - 1/4 கப்

செய்முறை:
 
ஒரு பௌலில் நெய்யை எடுத்து கொள்ளவும் தயிரை அதனுடன் சேர்க்கவும் அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்க்கவும் நன்றாக கலக்கவும் அதனுடன் 1 கப் மைதா மாவை சேர்த்து நன்றாக கலக்கவும் கைகளில் ஒட்டாத வண்ணம் மிதமான பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்.
 
கொஞ்சம் மாவை எடுத்து உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும் பல் குத்தும் குச்சியை கொண்டு நடுவில் லேசாக அழுத்தி விடவும் பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும் ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும். அவைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் குறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும். ஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். 
 
பிறகு ஆற வைக்கவும் அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும் உடனே தண்ணீர் ஊற்றவும் சர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும் பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

இப்பொழுது பொரித்தெடுத்த பாதுஷாவை எடுத்து சர்க்கரை பாகுவில் ஊற வைக்க வேண்டும் -15 நிமிடங்கள் ஊற வைக்கவும் பிறகு ஊற வைத்த பாதுஷாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும் சர்க்கரை பாகு நன்றாக உறைந்ததும் பாதுஷாவை பறிமாறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்