செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் சின்ன வெங்காயம், கேரட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
இறுதியாக தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கேரட் சட்னி தயார்.