பப்பாளி பழத்தில் அல்வா செய்ய தெரியுமா...?

Webdunia
தேவையானப் பொருட்கள்:
 
பப்பாளி பழ துண்டுகள்  -  3 கப்
சர்க்கரை  -  3/4 கப்
நெய்  -  4 தேக்கரண்டி
பால்  -  காய்ச்சியது 1/2 கப்
ஏலக்காய் தூள்  -  சிறிதளவு
முந்திரி  -  7
பாதாம் பருப்பு  -  7
செய்முறை:
 
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள். அதிகம் பழத்த பழமாக இல்லாமல் சற்று காய் பதத்தில் எடுத்து கொள்ளவும். பாதாம், முந்திரி பருப்புகளை மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழத்தை  சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு வதக்குங்கள்.
பச்சை வாடை போனதும் காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு வேக விடவும். பப்பாளி நன்கு குழைந்து வரும் அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி  விடவும். அல்வா சுண்டி வரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவிடவும்.
 
பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொழுது முந்திரி, பாதாம், ஏலக்காய் தூள் தூவி கிளறி இறக்கவும். சுவையான பப்பாளி அல்வா தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்