அதிக சுவை மிக்க பருப்பு ரசம் செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
தக்காளி - ஒன்று 
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 8 பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
பருப்புத் தண்ணீர் - 100 மில்லி (துவரம் பருப்பு வேக வைத்து வடித்த தண்ணீர் அல்கது மசித்தது).
செய்முறை:
 
புளியை சிறிது நேரம் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாயை கரகரப்பாக பொடித்து  கொள்ளவும்.
 
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை கையில் நன்றாக பிசைந்தோ அல்லது மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றியோ  தனியே வைத்துக் கொள்ளவும்.
 
கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகுபோட்டு தாளித்த பின் தட்டி வைத்துள்ள பூண்டு சீரகம் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளியுடன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை சிறிதளவு இதனுடன் சேர்த்துத்  தாளிக்கவும்.

அடுத்து அதில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் லேசாக கொதிக்க விடவும். பிறகு இதில் பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவும். 
 
கொதி வரும்போது அடுப்பை அணைத்து, இறுதியில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை ரசத்தின் மேலே தூவவும். சுவையான பருப்பு ரசம் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்