பலருடன் படுக்கையை பகிர்ந்து கருக்கலைப்பு செய்தேனா? - நடிகை பாவனா விளக்கம்

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (16:01 IST)
தான் பலமுறை கருக்கலைப்பு செய்ததாக கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளது. ஆனால் அது உண்மையில்லை என நடிகை பாவனா பேட்டியளித்துள்ளார்.


 

 
சில நாட்களுக்கு முன்பு, நடிகை பாவனாவை காரில் கடத்தி சென்று ஒரு கும்பல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கேரள திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது. அதன்பின், அதிலிருந்து மீண்ட பாவனா படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். மேலும், தனது காதலரை திருமணமும் செய்து கொண்டார்.
 
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
15 வயதில் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். என்னை பற்றி ஏராளமான கிசுகிசுக்கள் வந்திருக்கிறது. அதில் அபார்ஷன் பற்றிய கிசுகிசுக்கள்தான் அதிகமாய் வந்தது. நான் பட வாய்ப்பிற்காக பல இயக்குனர்களுடன் படுக்கையை பகிர்ந்து கர்ப்பமாகி, பல முறை   அபார்ஷன் செய்து கொண்டதாக கூறினார்கள். ஆனால் அது உண்மையில்லை.
 
நான் எப்போதும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவள். அதனாலேயே எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது” என பாவனா பேட்டியளித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்