ஒலிம்பிக் போட்டிகள் 2026க்கு ஒத்திவைப்பு! – ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (09:22 IST)
கொரோனா பரவலால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை 2026ம் ஆண்டு நடத்த திட்டமிட்டிருப்பதாக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஜப்பானில் நடைபெற இருந்த சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்ட நிலையில் இயல்பு நிலை திரும்பும்போது போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செனகல் நாட்டில் 2022ம் ஆண்டு இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி நடப்பதாக இருந்தது.

கொரோனா பாதிப்பினால் பல நாடுகள் முடங்கியுள்ள சூழலில் ஒலிம்பிக் ஸ்பான்சர்கள் நிலையும் மோசமாகி உள்ளது. இதனால் 2022ல் திட்டமிட்டபடி இளைஞர் ஒலிம்பிக்கை நடத்துவதில் நிதி சிக்கல்கல் ஏற்பட்டுள்ளன. எனவே பங்குதாரர்கள் நிலைமை சரியாகும் வரை இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ள ஒலிம்பிக் கமிட்டி 2022ம் தேதி நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகளை 2026ம் ஆண்டு நடத்துவதாக ஒரு மனதாக ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்