முதல் பந்தில் 3 முறை சிக்சர்.. உலக சாதனை செய்த ஜெய்ஸ்வால்..!

Siva

வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (06:58 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஒரு உலக சாதனையை ஏற்படுத்தி வரலாற்றில் தனக்கு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார்.
 
23 வயதான யஷஸ்வி, ஐபிஎல் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே மூன்றாவது முறையாக சிக்ஸ் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுவரை இந்த வித்தியாசமான சாதனையை ஒருமுறை கூட செய்தவர்கள் எட்டு பேர் மட்டுமே.
 
நேற்றைய ஐபிஎல் போட்டியில்  பெங்களூரு அணி 205 ரன்கள் அடிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி,  206 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் மைதானத்தில் களமிறங்கி  புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்தை சந்தித்து அந்த பந்தை சிக்சருக்கு விரட்டினார்.  இதன் மூலம் ஒரு போட்டியில் முதல் பந்தில் 3 முறை சிக்சர் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை பெற்றார்.
 
ஐபிஎல் தொடரில் முதல் பந்தில் சிக்ஸ் விளாசிய வீரர்கள்:
 
3 முறை – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
 
1 முறை – நமன் ஓஜா (ராஜஸ்தான் ராயல்ஸ்)
 
1 முறை – மயங்க் அகர்வால்
 
1 முறை – சுனில் நரேன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
 
1 முறை – விராட் கோலி (ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு)
 
1 முறை – ராபின் உத்தப்பா
 
1 முறை – பில் சால்ட் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
 
1 முறை – பிரியாஞ்ஷ் ஆர்யா (பஞ்சாப் கிங்ஸ்)
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் உலக சாதனை செய்தாலும், ராஜஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்