ஹாக்கி உலககோப்பை: அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் முடிவு!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (19:00 IST)
கடந்த சில நாட்களாக ஒடிசாவில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் முடிவடைந்தது.
 
 இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ஆரம்ப முதலே அதிரடியாக அடுத்தடுத்து கோல் போட்டனர்.
 
இந்த நிலையில் ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 5 கோல்கள் போட்ட நிலையில் போட்டி டிராவில் முடிந்ததாக நடுவர் தெரிவித்துள்ளார்
 
இந்த போட்டியுடன் குரூப் ஏ லீப் போட்டிகள் முடிவடைந்தன என்பதும் இதன் அடிப்படையில் குரூப் ஏவில் ஆஸ்திரேலிய முதல் இடத்தில, அர்ஜென்டினா இரண்டாவது இடத்திலும், பிரான்ஸ் மூன்றாவது இடத்திலும், தென்னாபிரிக்கா நான்காவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்