மகளிர் ஐபிஎல்: இன்று வீராங்கனைகள் ஏலம்..!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (07:27 IST)
இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் 5 அணிகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று வீராங்கனைகளை ஏலம் நடைபெற உள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மகளிர் ஐபிஎல் போட்டியில் அகமதாபாத் பெங்களூர் டெல்லி லக்னோ மற்றும் மும்பை ஆகிய ஐந்து அணிகள் உருவாக்கப்பட்ட நிலையில் இந்த ஐந்து அணிகளுக்கும் சேர்ந்து 30 வெளிநாட்டு வீராங்கனைகள் மற்றும் 60 உள்நாட்டு வீராங்கனைகள் ஏலம் விடப்பட உள்ளனர். 
 
இன்று வீராங்கனைகளின் ஏலம் பிற்பகல் நடைபெற உள்ளதாகவும் இதில் 15 நாடுகளைச் சேர்ந்த 450 வீராங்கனைகள் இடம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிர்தி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், சினே ராணா ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதேபோல் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னெர், எலிஸ் பெர்ரி, மெக் லானிங், அலிசா ஹீலே, இங்கிலாந்தின் சோபி எக்லெக்ஸ்டன், நாட் சிவெர், நியூசிலாந்தின் சோபி டேவின், வெஸ்ட் இண்டீசின் டியாந்திரா டோட்டின் ஆகியோர்களுக்கும் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்