மகளிர் பிரீமியர் லீக் லோகோ இதுதான்: பிசிசிஐ வெளியீடு..!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (18:20 IST)
இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது என்பதும் அதற்காக ஐந்து அணிகள் தேர்வு செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். அது மட்டும் இன்றி ஐந்து அணிகளுக்கான வீராங்கனைகளின் ஏலமும் இன்று நடைபெற்றது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் பிசிசிஐ மகளிர் ஐபிஎல் போட்டிக்கான லோகோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த லோகோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
இன்றைய ஏலம் தொடங்குவதற்கு முன்னர் பிசிசி தலைவர் ரோஜர் பின்னி செயலாளர் ஜெய்ஷா ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஆகியோர் இந்த லோகவை வெளியிட்டுள்ளனர். இந்த லோகோ அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட இருக்கும் ஐந்து அணிகளுக்கு 30 வெளிநாட்டு வீராங்கனைகள் மற்றும் 60 உள்நாட்டு வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அகமதாபாத் பெங்களூர் டெல்லி லக்னோ மற்றும் மும்பை ஆகிய ஐந்து அணிகள் முதலாவது ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்