கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய வருமானவரி மசோதாவை திரும்ப பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்தினார். அதன்படி, ஆண்டுக்கு 12 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு வரி இல்லை என்றும், அதற்கு பிறகான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்றும் புதிய ஸ்லாப் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஏற்கனவே பழைய ஸ்லாப் முறையில் இருப்பவர்களை புதிய முறைக்கு மாற்றுவதற்காக பல அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. கிட்டத்தட்ட அறிவிப்புக்கு ஒன்றரை ஆண்டுக்கு பிறகு தற்போது புதிய வருமானவரியை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய வருமானவரி மசோதாவை திரும்ப பெற்று வரும் 11ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தில் மீண்டும் வேறொரு புதிய வருமானவரி மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K