இங்கிலாந்து டெஸ்ட் தொடர்… ஃபார்முக்கு திரும்புவாரா கோலி!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (11:00 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சர்வதேசப் போட்டிகளில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவர் சதம் அடித்து ஒன்றைரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவர் கிரிக்கெட் அறிமுகமானதில் இருந்து சதமடிக்காத ஆண்டாக 2020 உள்ளது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பெரிய அளவில் போட்டிகள் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கும் தொடரில் அவர் மீண்டும் பார்முக்கு வந்து இந்திய அணியை வெற்றி நடைப் போடவைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்