2வது டி20: டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அதிரடி முடிவு

ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (18:53 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதும் அந்த போட்டியில் விராத் கோஹ்லியின் அதிரடி ஆட்டம் ஆடினார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று திருவனந்தபுரம் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்க உள்ளது. இந்த நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் பொல்லார்டு டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடும் வீரர்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:
 
இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஷிவன் டூபே, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார், புவனேஷ்வர் குமார், சஹால்
 
மே.இ.தீவுகள் அணி: சிம்மன்ஸ், லீவிஸ், பிராண்டன் கிங், ஹெட்மயர், பூரன், பொல்லார்ட், ஹோல்டர், பியரி, வில்லியம்ஸ், காட்ரெல், ஹெய்டன்,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்