ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சி கோப்பைகளில் விளையாடியுள்ளவர் விவேக் யாதவ். இவர் ராஜஸ்தான் அணி ரஞ்சி கோப்பையை வென்ற போது முக்கியப் பங்காற்றியவர். இதுவரை 18 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள விவேக் யாதவ், 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.