ஒரே போட்டியில் இரு வீரர்கள் சதம்.. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை..!

வெள்ளி, 19 மே 2023 (08:16 IST)
ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் இரண்டு அணி வீரர்களும் சதம் அடித்தது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது 
 
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. கிளாசன் மிக அபாரமாக விளையாட 104 ரன்கள் எடுத்தார். 
 
அதேபோல் 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி த்து வெற்றி பெற்றது. இதில் விராத் கோலி 63 பந்துகளில் அபாரமாக சதம் அடித்தார். 
 
நேற்றைய போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணி வீரர்களும் சதம் அடித்தது வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரே போட்டியில் இரண்டு வீரர்கள் சதம்  அடித்திருந்தாலும் நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்