முன்னதாக மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் அரை இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் என்பவருடன் மோதினர். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.