ஐபிஎல் 2023: டாஸ் வென்ற கொல்கத்தா அணி எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (16:31 IST)
ஐபிஎல் போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் முதல் போட்டியான பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
 
 இதனை அடுத்து பஞ்சாப் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பதும் அந்த அணி 12 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்ச 50 ரன்கள் எடுத்துள்ளார். 
 
கொல்கத்தா அணியை பொருத்தவரை உமேஷ் யாதவ் மற்றும் டிம் செளதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இன்று நடைபெறும் இன்னொரு லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்