சிஎஸ்கே-டெல்லி அணிகள் இன்று மோதல்.. இன்று முதல் அனைத்து போட்டிகளும் விறுவிறுப்பு தான்..!

Webdunia
சனி, 20 மே 2023 (11:11 IST)
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று டெல்லியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. 
 
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று விட்டால் 17 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியல் இரண்டாவது இடத்தை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் அதே நேரத்தில் டெல்லி வெற்றி பெற்று விட்டால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து சிஎஸ்கே அணியின் பிளே ஆப் சுற்றும் முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டி உள்பட 4 போட்டிகள் மட்டுமே உள்ளது. இந்த  நான்கு போட்டிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வைக்கும் முக்கியமான போட்டி என்பதால் அனைத்து போட்டிகளும் விறுவிறுப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்