கால்பந்து விளையாடும் போது மயங்கி விழுந்து வீரர் அதிர்ச்சி மரணம்

Webdunia
சனி, 7 மே 2016 (12:26 IST)
கேமரூன் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் பேட்ரிக் எகெங், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 
பேட்ரில் எகெங்(26), டினாமோ புக்காரெஸ்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் நேற்று நடந்த போட்டியில் வீடோரல் கான்ஸ்டண்டா அணிக்கு எதிராக, மாற்று வேட்பாளரக களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்போது மைதானத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் மரணமடைந்திருக்கலாம் என தெரிகிறது
 
அவரது ஆன்மா சாந்தி அடைய கடவுள் அருள் புரியட்டும் என்று அவரது அணி வீரர்கள் தங்களின் இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்