2022- ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்: ரிஷப் பாண்ட், பும்ரா ஆகிய இருவரும் முதலிடம்!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (18:04 IST)
சர்வதேச கிரிக்கெட்டில்  இந்திய அணிக்கு எனத் தனி இடமுள்ளது.

சமீபத்தில் நடந்த டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில்  சொதப்பினாலும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசி இந்த 2022  ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய  இந்திய வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட், மற்றும்  ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய இருவரும் முதலிடம் பிடித்துள்ளனர்.

நேற்று அதிகாலை உத்தரகாண்டில் விபத்திற்குள்ளான ரிஷப் பாண்ட் 7 போட்டிகளில் விளையாடி 680 ரன் கள் எடுத்து, 61.81 சராசரி வைத்துள்ளார். இதில், 2 சதங்களும்,
4 அரை சதங்களும் அடங்கும்.

பும்ரா, 5 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். பெஸ்டாக 47 ரன் கள் கொடுத்து 8 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இவர், 20.31 ஆவரேஜ் வைத்துள்ளார். இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்