ஐபிஎல்-அ விடுங்க… டி 20 உலகக்கோப்பையே நடக்காது போல இருக்கே!

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (16:28 IST)
கொரோனா பீதியால் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இப்போது அக்டோபர் மாதம் நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பை தொடரே நடக்காதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் இடங்களான தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. உலகளாவிய போட்டிகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளையும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடத்துவது இல்லை என பிசிசிஐ அறிவித்தது. அதன் பின்னர் நடத்துவது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் கவுன்சில் ஆலோசனை கூட்டம் நாளை நடத்த இருந்தனர். ஆனால் அந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதேப்போல அக்டோபர் 21 ஆம் தேதி நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பை தொடரே நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் கொரொனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் 6 மாதத்துக்கு வெளிநாட்டவர் யாரும் ஆஸ்திரேலியாவுக்குள் வரக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் டி 20 உலகக்கோப்பைத் தொடர் ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளிவைக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்