2021-ல் பெண்களுக்கும் ஐபிஎல்: பிசிசிஐ-யை வேண்டும் மித்தாலி ராஜ்!!

சனி, 28 மார்ச் 2020 (14:58 IST)
மித்தாலி ராஜ் 2021 ஆம் ஆண்டும் பெண்களுக்காக ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 
 
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 29 ஆம் தேதி துவங்கி மே 24 வரை நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை முழுவீச்சில் பிசிசிஐ மேற்கொண்டது. ஆனால், இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டது.
 
இதனால் ஐபிஎல் போட்டிகள் ஏபர்ல் 15 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகமும் உள்ளது. இந்நிலையில், மித்தாலி ராஜ் 2021 ஆம் ஆண்டும் பெண்களுக்காக ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது... 
 
பெண்களுக்கான ஐபில் தொடரை அடுத்த ஆண்டாவது துவங்க் அவேண்டும். ஆண்கள் அணி ஐபிஎல் போட்டிகளுக்கு இருப்பதை போல அல்லாமல் கொஞ்சம் விதிகளை தளர்த்தி, ஒரு அணியில் 6 பேர் வரை வெளிநாட்டு வீரர்கள் விளையாடலாம் என அனுமதிக்கலாம். 
 
ஏற்கனவே அணிகள் வைத்திருக்கும் முகவர்கள், பெண்கல் ஐபிஎல் அணிகளை உருவாக்குவது கடினம் அல்ல. எனவே பெண்கள் ஐபிஎல் நடத்த தாமதிக்காமல் ஏதாவது ஒரு புள்ளியில் பொட்டியை துவங்கி பின்னர் ஒவ்வொரு ஆண்டாக அதன் தரத்தை உயர்த்திக்கொள்ளலாம் என பேசியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்