இந்நிலையில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நடராஜன் உலகக்கோப்பை டி 20 போட்டியில் விளையாடாதது குறித்து பேசியுள்ளார். அதில் நடராஜன் ஒரு சிறந்த டெத் ஓவர் பவுலர். உலகக்கோப்பைக்கு முன்பாக அவர் காயமடைந்தார். அதனால் அவரை நாங்க அவரை மிஸ் பண்ணோம். எனக் கூறியுள்ளார். இந்திய அணி உலகக்கோப்பை டி 20 போட்டியில் லீக் சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த சீசனில் இந்திய பவுலர்கள் பலரும் தடுமாறி வரும் நிலையில் நடராஜன் சிறப்பாக பந்துவீசி கலக்கி வருகிறார். அதிலும் குறிப்பாக டெத் ஓவர்களில் யார்க்கர்கள் வீசி, பேட்ஸ்மேன்களை திணற வைக்கின்றார். இந்நிலையில் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், “நடராஜனைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனக் கூறி அவருக்கு ஆதரவாகக் கூறியுள்ளார்.