சென்னை ஐஐடி.யில் மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி

திங்கள், 25 ஏப்ரல் 2022 (13:04 IST)
சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 18 பேருக்கு கொரனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 சென்னை ஐஐடியில் நேற்று வரை மாணவர்கள் உள்பட 60 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருந்த நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் சென்னை ஐஐடியில் மேலும் மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரனோ உறுதியாகி உள்ளது 
 
இதனை அடுத்து சென்னை ஐஐடியில் கொரனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்