ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய சுமித் மாலிக்… ஒலிம்பிக்கில் பங்கேற்பது சந்தேகம்!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (09:00 IST)
இந்திய மல்யுத்த வீரரான சுமித் மாலிக் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுமித் மாலிக். சமீபகாலமாக அதிகமான போட்டியில் வென்றிருந்த அவர் ஒலிம்பிக் தொடருக்கு தகுதிப் பெற்றிருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் பல்கேரியாவில் அவருக்கு நடத்தப்பட்ட  ஊக்கமருந்து சோதனையின் முடிவுகள் வெளியாக அதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வது கேள்விக்குறியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்