நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

Prasanth Karthick

செவ்வாய், 21 மே 2024 (09:09 IST)
ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் முடிவுக்கு வந்த நிலையில் இன்று முதலாவது தகுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதிக் கொள்ள உள்ளது.



நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்துள்ளது. இந்த லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

லீக் போட்டிகளில் கொல்கத்தா அணி 14 போட்டிகளில் 9 போட்டிகளில் வென்று 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2 போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டதால் கொல்கத்தா அணிக்கு 2 புள்ளிகள் மட்டுமே பகிரப்பட்டது. எனினும் இந்த சீசனில் பலம்வாய்ந்த அணியாக கொல்கத்தா அணி விளங்குகிறது. இதற்கு முன்னர் லீக் சுற்றுகளில் மோதியபோது சன்ரைசர்ஸை கொல்கத்தா வீழ்த்தியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் 14 போட்டிகளில் 8ல் வெற்றிபெற்று 17 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு ஒரு புள்ளி மட்டும் பகிரப்பட்டது. எனினும் இந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபியின் 263 ரன்கள் சாதனையை 3 முறை முறியடித்து புதிய சாதனை படைத்தது. பேட்டிங் வகையிலு, பவுலிங்கிலும் சன்ரைசர்ஸ் அணியும் வலுவாக உள்ளது. இதனால் இன்றைய போட்டி ஆரம்பம் முதலே பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்