ராஜஸ்தானை வீழ்த்திய ஹைதராபாத்

Webdunia
ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (19:31 IST)
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் ராஜஸ்தான் - ஹைதராபாத் ஆகிய அணிகள் விளையாடியது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் ஹைதராபாத் அணி 6வது வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்