முன்னே விட்டுக்கொடுத்து பின்னே சுதாரித்த தென் ஆப்பிரிக்கா – 275 ரன்னுக்கு ஆல் அவுட்

சனி, 12 அக்டோபர் 2019 (16:31 IST)
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் தென் ஆப்பிரிக்க அணி 275 ரன்கள் சேர்த்து 9 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே புனேவில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் அருமையான இரட்டைச் சதத்தால் இந்தியா 601 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்ததது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை நேற்றுத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றே 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் இன்று போட்டி தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே மேலும் இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. சற்று முன்பு வரை 23 ஓவர்களில் 57 ரன்களை சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. அணியின் கேப்டன் பாஃப் டூ பிளஸ்சி மற்றும் குயிண்டன் டிகாக் ஆகியோர் சிறிது நேரம் நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் ஆறாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர் 2 விக்கெட்கள் சீக்கிரமே விழ அந்த அணி ஒரு கட்டத்தில் 162 ரன்களுக்கு 8 விக்கெட்கள் என மோசமான நிலையில் இருந்தது. அதன் பின்னர் கேசவ் மகாராஹும் பிலாண்டரும் நங்கூரம் பாய்ச்சியது போல நின்று விளையாட ஆரம்பித்தனர். அவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணற 9 ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 109 ரன்களை சேர்த்தது. 72 ரன்கள் எடுத்த மகாராஜை அஸ்வின் அவுட் ஆக்கினர். அதன் பின்னர் மேலும் 3 ரன்கள் அடித்த நிலையில் ரபாடா 2 ரன்களில் அவுட் ஆக தென் ஆப்பிரிக்க 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பாக அஸ்வின் 4 விக்கெட்களும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்