பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் வருகையை முன்னிட்டு சென்னை முதல் மாமல்லபுரம் வரை 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாமல்லபுரத்தில் 800 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள காவலர்களின் நிலை கவலையை அளிக்கிறது. ஆம், காவல் உயர் அதிகாரிகள் மாமல்லபுரம் பகுதியில் இருக்கும் தனியார் விடுதிகளைப் பயன்படுத்தி கொண்டனர்.
ஆனால், கீழ் மட்டத்தில் இருக்கும் காவலர்கள் இரவு நேரத்தில் ஓய்வெடுக்கக்கூட இடமின்றி ரோட்டிலும், கடற்கரை ஓரமாக மணலில் துண்டு விரித்து படுத்து உறங்கியது பார்ப்பதற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.