7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் தென்னாப்பிரிக்கா: வெற்றியின் விளிம்பில் இந்தியா

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (14:40 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனே நகரில் கடந்த பத்தாம் தேதி முதல் நடைபெற்று வருவது வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த 601 ரன்கள் குவித்தது. விராட் கோலி இரட்டை சதமும் மயாங்க் அகர்வால் சதமும் அடித்தனர்.
 
இந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 275 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் அந்த அணி ஃபாலோ ஆன் ஆகி மீண்டும் இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கியது.
 
ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சற்றுமுன் வரை 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இன்னும் 150 ரன்கள் பின்தங்கி உள்ள தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
ஸ்கோர் விபரம்: 
 
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 601/5
 
விராத் கோஹ்லி: 254
மயாங்க் அகர்வால்: 108
ஜடேஜா: 91
ரஹானே: 59
 
தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 275/10
 
டீபிளஸ்சிஸ்: 64
ஃபிலண்டர்: 44
டீகாக்: 31
 
தென்னாப்பிரிக்கா 2வது இன்னிங்ஸ்: 182/7
 
எல்கர்: 48
பவுமா: 38
ஃபிலண்டர்: 33

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்