ரொனால்டோ அறிமுகப்படுத்திய புதிய கைக்கடிகாரம்! - விலையை கேட்டா மிரண்டு போவீங்க!

Prasanth Karthick
திங்கள், 14 அக்டோபர் 2024 (10:13 IST)

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிரபல கடிகார நிறுவனத்துடன் இணைந்து தனது அடையாளத்துடன் கூடிய பிரத்யேக வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

 

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கால்பந்து வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முக்கியமானவர். கால்பந்து போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ரொனால்டோ தற்போது யூட்யூப் சேனல், இன்ன பிற தொழில்கள் என பிஸியாகி வருகிறார். சமீபத்தில் ரொனால்டோ யூட்யூப் சேனல் தொடங்கிய நிலையில் ஒரு நாளைக்குள்ளேயே பல கோடி சப்ஸ்க்ரைபர்களை பெற்று ஆச்சர்யப்பட வைத்தார்.

 

தற்போது பிரபலமான ஜேக்கப் அண்ட் கோ (Jacob and Co) வாட்ச் நிறுவனத்துடன் இணைந்து தனது பிரத்யேகமான வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளார் ரொனால்டோ. Flight of CR7 மற்றும் Heart of CR7 என்ற அந்த இரு மாடல் வாட்ச்களும் அறிமுகமான சில மணி நேரங்களில் ஏராளமான ரொனால்டோ ரசிகர்களால் வாங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

ALSO READ: படங்களைத் திருட்டுத்தனமாக பதிவு செய்தது எப்படி?... தமிழ் ராக்கர்ஸ் குழு அளித்த வாக்குமூலம்!
 

இந்த வாட்ச்களை அறிமுகப்படுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ரொனால்டோ “எனது சொந்த கடிகார சேகரிப்பு வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டேன். ஜேக்கப் அண்ட் கோ. ஃபிளைட் ஆஃப் CR7 & தி ஹார்ட் ஆஃப் சிஆர்7 ஆகியவை களத்தில் எனது மிகச் சிறந்த தருணங்களை பிரதிபலிப்பதாக தயாரிக்கப்பட்டுள்ளது. என்னைப் போலவே நீங்களும் அவர்களை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

இந்திய மதிப்பில் Heart of CR7 வாட்ச்சின் விலை ரூ.30 லட்சம் ஆகும். Flight of CR7 மாடலின் விலை ரூ.27 லட்சம் வரை விற்பனை ஆகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்