பிசிசிஐயின் முடிவு சரியானது… மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா பாராட்டு!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (12:25 IST)
ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்தியது சரியான முடிவு என மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒளிபரப்பு மூலம் வரும் விளம்பர வருமானம் உள்ளிட்டவைகளை இப்போது பிசிசிஐ இழந்துள்ளது.

ஆனாலும் பிசிசிஐ யின் இந்த முடிவு சரியானது என்று ரோஹித் ஷர்மா பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘நாட்டில் நிலவும் அசாதாரண சூழலைக் கணக்கில் கொண்டு பார்த்தால் பிசிசிஐ யின் முடிவு சரியானதே. விதிமுறைகளைப் பின்பற்றி கொரோனாவை விரட்டி அடிப்போம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்