கேப்டனாக நியமிக்கப்பட்டதும் ரோகித் சர்மா, கோலி போல் அணிக்காக ரன்கள் குவிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். ஒருநாள் போட்டி தொடரில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 35 பந்துகளில் அதிவே சதம் விளாசினார்.
இவரது பங்களிப்பு அணிக்கு மேலும் பலத்தை கொடுத்தது. இதனால் நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் கோலி கேப்டனாக செயல்பட்டாலும், இக்கட்டான சூழ்நிலைகளில் தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் விராட் கோலி கேப்டனாக தோல்வியை சந்தித்து நெருக்கடிக்கு தள்ளப்பட்டால் அடுத்து கேப்டன் பதவி ரோகித் சர்மாவுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. ரோகித் சர்மாவும் அணிக்காக தனது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்படுகிறார். இதனால் விராட் கோலியின் வெற்றிப்பயணத்தை பொறுத்தே அவரது கேப்டன் பதவி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.