ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த கோலி

வெள்ளி, 22 டிசம்பர் 2017 (16:24 IST)
விளம்பர படங்கள் மூலம் பெறும் வருமானத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

 
ட்ஃப் அண்ட் பெல்ப்ஸ் என்ற அமைப்பு வருடாவருடம் விளம்பர படங்கள் மூலம் யார் யார் எவ்வளவு வருமானம் பெறுகிறார்கள் என்பது குறித்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டிற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. 
 
இந்த பட்டியல் பிரபலங்கள், விளம்பரங்களில் வாங்கப்படும் சம்பளத்தில் தொடங்கி பொது இடங்களில் பிரபலங்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற அடிப்படையில் கணக்கிடப்படும். இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
 
இதுவரை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்தான் பட்டியலில் முதலிடம் பிடித்து வந்தார். ஆனால் இந்த ஆண்டு விராட் கோலி ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். விராட் கோலி விளம்பரங்கள் மூலம் ரூ.920 கோடி சம்பாதித்து உள்ளார். இது கடந்த வருடத்தை விட 52% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ரூ.680 கோடி வருமானத்துடன் ஷாருக்கான் இரண்டாம் இடத்தில் உள்ளார். விராட் கோலி இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது இதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. மேலும் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டவுடன் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கியதும் காரணமாய் அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்