வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-வது போட்டியில் ரோகித் சர்மா காயத்துடன் விளையாடினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவரது காயம் இன்னும் முழுமையாக குணமாகாததால் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொடரில் இருந்து முகமது ஷமி ஜடேஜா ஆகியோர் விலகி இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக நவதீப் சைனி மற்றும் உனத்கட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.