இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்று முன் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதமடித்தார். ஆனால் 101 ரன்களில் அவர் அவுட்டானது ஏமாற்றத்தை அளித்துள்ளது.