கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,838 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,73,761 ஆக உயர்ந்தது. புதிதாக 113 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,548 ஆக உயர்ந்தது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 16,838 பேர் குணமடைந்துள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,08,39,894 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,76,319 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.