சென்னை, போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் அருகே, முன்னறிவிப்பின்றி குரு பூஜை மற்றும் சிறப்பு சாகா பயிற்சி நடத்தியதாக கூறி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் அதே மைதானத்தில் தான் அவர்கள் சாகா பயிற்சி நடத்தியுள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, அன்றாட சமூக விரோதச் செயல்களையும், சட்டம் ஒழுங்கு சீரழிவையும் கண்மூடித்தனமாக புறக்கணிக்கிறது. ஆனால், தேசிய, பாரம்பரிய, ஆன்மீக மற்றும் தேசபக்தி பண்பாட்டு நிகழ்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேசவிரோத மனநிலையை தெளிவாக வெளிப்படுத்துகிறது என்று கூறினார்.