கையை விட்டு போன மேட்சை வெற்றியாக மாற்றிய ராஜஸ்தான்!

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (19:26 IST)
இன்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முக்கிய ஐந்து விக்கெட்டுகள் வெகு சீக்கிரம் விழுந்து விட்ட போதிலும் ராஜஸ்தான் அணியின் இரண்டு இளைஞர்கள் இந்த போட்டியை வெற்றிகரமாக மாற்றியுள்ளனர் 
 
இந்த போட்டியில் ஐதராபாத் இலக்காக கொடுத்த 159 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியின் 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் என்ற நிலையில் ஒரு கட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது 
 
அப்போது களத்தில் இறங்கிய பராக் மற்றும் ராகுல் திவெட்டியா மிக அபாரமாக விளையாடி 19.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். பராக் 26 பந்துகளில் 42 ரன்களும், ராகுல் 28 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றி ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வெற்றியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்