இன்றைய ஐபிஎல் போட்டி – பஞ்சாப் vs ராஜஸ்தான்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (11:39 IST)
ஐபிஎல் தொடர் மறுபடியும் தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் இப்போது ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்து வருகிறது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளும் உப்புச் சப்பில்லாமல் முடிந்துள்ளன. இந்நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோத உள்ளன.

இரு அணிகளும் அதிக தோல்விகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன. இரு அணிகளும் இனிவரும் எல்லா போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளன என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்