மழையால் ஆட்டம் நிறுத்தம்.. போட்டி ரத்தானால் பாகிஸ்தான் வெற்றியா?

Webdunia
சனி, 4 நவம்பர் 2023 (17:10 IST)
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ள நிலையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி தற்போது 10 ரன்கள் அதிகமாக எடுத்து உள்ளது. அதாவது 21.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்திருந்தாலே பாகிஸ்தான் வெற்றி என்ற நிலையில் தற்போது 10 ரன்கள் அதிகம் எடுத்து இருப்பதால் ஒருவேளை இன்று போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இதனால் 400 ரன்களுக்கும் மேல் அடித்த நியூசிலாந்து அணி  கடும் அதிருப்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்