பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங் காரணமாக பாகிஸ்தான் அணி தோல்வி அடையும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 556 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 823 ரன்கள் குவித்து சாதனை செய்தது. இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 268 ரன்களும், எடுத்தனர்.
இதனை அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி படு மோசமாக விளையாடியதை அடுத்து 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இன்னும் 115 ரன்கள் பின்தங்கிய நிலையில், பாகிஸ்தான் நான்கு விக்கெட் விரைவில் விழுந்து விட்டால் அந்த அணி தோல்வி அடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் , இங்கிலாந்து அணி பாகிஸ்தானின் நான்கு விக்கெட் வீழ்த்துமா அல்லது பாகிஸ்தான் இந்த போட்டியை கஷ்டப்பட்டு டிரா செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.